அடுத்த வருடம் மின்சார புகையிரத சேவை!

Monday, September 4th, 2017

இலங்கையில் மின்சார புகையிரத சேவை அடுத்த வருடம் ஆரம்பமாகும் என  புகையிரத திணைக்களத்தின் உதவி வர்த்தக அத்தியட்சகர் என்.ஜே.இதிபொல தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தத் திட்டத்திற்கு கடன் உதவியை வழங்கியுள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் 60 கோடி டொலர் நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ளது.

முதலாம் கட்டத்தின் கீழ் பாணந்துறையில் இருந்து வெயங்கொட வரை மின்சார ரயில் சேவை அமுல்படுத்தப்படும். இந்த சேவைக்கான நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் பொழுது ரயில் பாதையின் இருமருங்கிலுமுள்ள சட்டவிரோத கட்டமைப்புகள் அகற்றப்படும். பாணந்துறையில் இருந்து வெயங்கொட வரையிலான பகுதியில் புதிய பாதசாரி பாலமொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இந்த சேவைக்கென புதிய அனுமதி சீட்டொன்றும் அறிமுகப்படுத்தப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ் வெயங்கொடயிலிருந்து பொல்கஹவ வரையிலும் அதேவேளை பாணந்துறை இருந்து அளுத்கம வரையிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் புகையிரத திணைக்களத்தின் உதவி வர்த்தக அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

இலட்சியமும் கொள்கைப்பற்றும்  இல்லாதவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் - தொண்டமானாறு பகுதி மக்கள் ...
உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படாது - அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர...
டிசம்பர் மாதத்தில் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிப்பு - யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்ப...

வன்முறையைக் கையாண்டு அநாகரிகமான முறையில் நசுக்க முற்பட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை ஆசிரியர்...
சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர் - இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!
தீவக பகுதியில் சூரிய மின்னுற்பத்தி திட்டம் - இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க அமைச்சரவை அங்கீக...