தீவக பகுதியில் சூரிய மின்னுற்பத்தி திட்டம் – இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, December 12th, 2023

யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவக பகுதியில் சூரிய மின்னுற்பத்தி திட்டத்துக்கு இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நெடுந்தீவு நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் குடியிருப்போருக்கு மின்சாரம் வழங்குவதற்காக 11 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியனுசரணையை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு இந்திய அரசு விருப்பம் தெரிவித்திருந்தது.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கமைய குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இந்திய ஒப்பந்ததாரர்களிடமிருந்து மட்டும் விலைமனு கோரப்பட்டது.

அதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தை U-Solar Clean Energy Solutions (Pvt) Ltd நிறுவனத்துக்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: