டிசம்பர் மாதத்தில் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிப்பு – யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!
Monday, December 23rd, 2024
யாழ். மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது – “யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, டெங்குத் தொற்று மிகையாக அதிகரித்து வருகின்றது. இதன்படி, நவம்பர் மாதத்தில் 134 பேரும், டிசம்பர் மாதத்தில் 91 பேரும் டெங்குத் தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாகப் பேணுவது அவசியம்.” – என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2 ரூபா நாணயத்தை விழுங்கினார் சிறுமி!
ஜனாதிபதி பதவியேற்று இன்று 4 வருடங்கள் பூர்த்தி!
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை - நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விடுக்கப்பட்டது எச்சர...
|
|
|


