2 ரூபா நாணயத்தை விழுங்கினார் சிறுமி!

Monday, August 6th, 2018

வாய்க்குள் வைத்திருந்த 2 ரூபா நாணயத்தை எட்டு வயதுச் சிறுமி விழுங்கியுள்ளார். அவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் கொடிகாமம் கச்சாயில் சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியான சிவலோகநாதன் துவாரகா (வயது 8) பாடசாலையில் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய வேளையில் வாயில் இரண்டு ரூபா நாணயத்தை வைத்திருந்துள்ளார். அது திடீரென்று தொண்டைக்குள் சென்றதும் உள்ளே சென்றுவிட்டது. அதனை வெளியே எடுக்க முற்பட்டபோது அது மேலும் உள்ளே சென்று விட்டது. மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

இதேவேளை பொம்மையில் பொருத்தப்பட்ட சங்கிலியை விழுங்கினார் என்று தெரிவிக்கப்பட்டு 3 வயதுச் சிறுவன் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் சிறுவனின் வயிற்றில் அப்படி எதுவும் இல்லை என்று தெரியவந்ததால் அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் சாவகச்சேரியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது.

மூன்று வயதுச் சிறுவன் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும் சிறிது நேரத்தில் அங்கு வந்த தாயார் பொம்மையில் பொருத்தப்பட்டிருந்த சங்கிலியைக் காணாததால் அதனைச் சிறுவன் விழுங்கியிருக்கலாம் என்று கருதிச் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தார். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது வயிற்றினுள் சங்கிலியைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts:

மினுவங்கொட கொரோனா கொத்தணியின் ஆரம்பம் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டிற்கு வரக்கூடியதாக உள்ளது - இராணுவ த...
11 மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் எச்சரி...
கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் ஆராய்வு!