நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து ஆள்மாறாட்ட மோசடிக்கு முயற்சி- மத்திய வங்கி எச்சரிக்கை!

இலங்கையின் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து ஃபிஷிங் (கடவுச் சொற்கள், கடனட்டை இலக்கங்கள், போன்ற தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துமாறு தனியாட்களை தூண்டிச் செயலாற்றுவிப்பதற்கான நோக்கத்துடன் முன்னணி கம்பனிகளிடமிருந்து மின்னஞ்சல்களை மோசடியான முறையில் அனுப்பும் நடவடிக்கை) முயற்சியொன்று தொடர்பாக இலங்கை மத்திய வங்கி நேற்று எச்சரித்திருக்கிறது.
மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் (ஈ.பி.எவ்.) திணைக்களத்திடமிருந்து இலங்கை மத்திய வங்கி ஈ.பி.எவ். பிடமிருந்து அறிவித்தல் என்ற விடயத்தில் அனுப்பப்படுவதாக தென்படும் ஃபிஷிங் மின்னஞ்சல்கள் குறித்தே மத்திய வங்கி எச்சரித்திருக்கிறது.
தரக் குறைவான இணையத்தளங்கள், தரவிறக்கம் செய்யக்கூடிய தரக்குறைவான மென்பொருள் என்பவற்றுடன் தொடர்புகளைக் கொண்டதாக மின்னஞ்சல்களின் உள்ளடக்கம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.
இந்த மாதிரியாக மின்னஞ்சல்களை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களம் அனுப்பவில்லையென பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் மத்திய வங்கி அறிவித்திருக்கிறது. இடம்பெற்றுவரும் ஃபிஷிங் முயற்சிகள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அத்துடன் இலங்கை மத்திய வங்கி ஈ.பி.எவ். விலிருந்து அறிவுறுத்தல் என்று வரும் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சலையும் திறக்க வேண்டாமெனவும் அல்லது அதனூடான இணைப்புக்களையும் திறக்க வேண்டாம் அல்லது அதன் தொடர்புகள் எதனையும் அழுத்த வேண்டாமெனவும் பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது.
Related posts:
|
|