மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் ஆரம்பம் !

Wednesday, August 23rd, 2023

ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது இலங்கை தொடர்பாக்க ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தொடர் குறித்த ஒழுங்கமைப்புக்கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெற இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் கூட்டத்தொடரின்போது ஏற்கனவே இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51 கீழ் 1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அபாயகரமானநிலையைகருத்திற்கொண்டுவீட்டில்இருந்து கற்றலை முன்னெடுங்கள் - மாணவர்களிடம் இலங்கைதமிழ்ஆசிரியர...
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 547 ஆக உயர்வு!
வடக்கு மக்களைப்போன்று ஏனைய மாகாண மக்களும் ஆர்வத்தை காட்ட வேண்டும் - இராணுவ தளபதி சவேந்திர சில்வா வலி...