அபாயகரமானநிலையைகருத்திற்கொண்டுவீட்டில்இருந்து கற்றலை முன்னெடுங்கள் – மாணவர்களிடம் இலங்கைதமிழ்ஆசிரியர்சங்கம் கோரிக்கை!

Wednesday, November 4th, 2020

கொரோனா தொற்று பரவல் நிலை காரணமாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் மாவணர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

குறித்த அறிவிப்பில் –

பாடசாலைகள் ஆரம்பிப்பது தாமதமாவதால் நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலையை கருத்திற்கொண்டு அனைத்து மாணவர்களும் கற்றல் நடவடிக்கைகளை வீட்டில் இருந்து மேற்கொள்ளுங்கள்.

அத்துடன் எக்காரணம் கொண்டும் வெளியிட பயணங்களை மேற்கொள்ள வேண்டாம், முகக்கவசம் இல்லாமல் பல மாணவர்கள் வெளியில் நடமாடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அது ஆபத்தானது.

கல்வித் திணைக்களமும், பாடசாலைகளும் வழிப்படுத்தும் இணையவழியிலும், தொலைக்காட்சி ஊடாகவும், நடைபெறும் கற்றல் செயற்பாடுகளில் இணைந்திருங்கள்.

தாய், தந்தையருக்கு அசௌகரியங்களைக் கொடுக்காது. உங்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்களோடு தொடர்பைப் பேணி பாடரீதியிலான தெளிவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சைக்கு ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு சங்கம் மாணவர்களிடம் வினையத்துடன் கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: