“வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை COP28 மாநாட்டில் முன்வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Monday, December 4th, 2023

உலக வெப்பமயமாதலின் சவாலை எதிர்கொள்ளுதல் மற்றும் வெப்ப வலய நாடுகளுக்கு நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்ட எதிர்காலத் திட்டமான “வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க COP28 மாநாட்டில் முன்வைதுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

குறித்த மாநாட்டின் போது காலநிலை நிதியங்களில் மாதிரி அடிப்படையிலான மாற்றம் மற்றும் பயனுள்ள பிரதிபலன்களை அடைவதற்கு பலதரப்பு அணுகுமுறையின் தேவை ஆகியவை இந்தத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு வழிவகுத்தது  என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த தீர்மானமிக்க இலக்கை அடைவதற்கான 50% வாய்ப்பு இருப்பதாக வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக ஏனைய நாடுகளிடம் இருந்து நிதி உதவி கிடைப்பதை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2030ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் இலக்கை அடைவதற்கான நிச்சயமற்ற தன்மைகள் குறித்து கவனம் செலுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தீர்மானமிக்க இலக்கை அடைவதற்கான 50% வாய்ப்பு இருப்பதாக வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக ஏனைய நாடுகளிடம் இருந்து நிதி உதவி கிடைப்பதை எதிர்பார்க்க முடியாது என்றார்.

எனவே, இந்த நிதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வெப்பவலய மற்றும் வெப்பவலயமற்ற நாடுகளுக்கும் அரச மற்றும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: