நாடாளுமன்றத்தில் குழப்பம்: தற்காலிகமாக ஒத்திவைப்பு!

Thursday, August 11th, 2016

கூட்டு எதிர்கட்சியினர் சபாநாயகரின் கட்டளையை மதிக்காமல் குழப்பம் விளைவித்ததால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வற்வரி தொடர்பாக இன்றைய நாடாளுமன்ற ஒன்றுகூடல் இடம் பெற்றது. காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் கால அவகாசம் கேட்டு கூச்சலிட்டனர். இதன்போது விமல் வீரவங்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோர் தொடர்ந்தும் கூச்சலிட்டு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதே வேளை பந்துல குணவர்தன தமது இருக்கையை விட்டு நாடாளுமன்றத்திற்கு நடுவில் வந்தார். இதனால் சபாநாயகர் “நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைக்க வேண்டும், ஏற்கனவே இவ்வாறான தவறு நிகழ்ந்தது இனியும் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது, பந்துல குணவர்தன அவரது இடத்திற்கு செல்ல வேண்டும்” என பல முறை எச்சரிக்கையினையும் விடுத்தார்.

கூட்டு எதிர்கட்சியினர் இதனை ஏற்றுக்கொள்ளாமல் கூச்சலிட்டதால் நாடாளுமன்றம் சபாநாயகரால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: