ரூபாவின் வீழ்ச்சியால் நாட்டின் கடன் அதிகரிப்பு  – மத்திய வங்கி சுட்டிக்காட்டு!

Thursday, May 11th, 2017

கடந்தாண்டு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.இதன் காரணமாக இலங்கையின் முழுமையான கடன் 186.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதென இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

2016 ஆம் ஆண்டுகு;கான புள்ளி விவரங்களின் அடிப்படையில் மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையிலேய இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம் 2015ஆம் ஆண்டு இறுதியில் நூற்றுக்கு 77.6 வீதமாக பதிவாகியுள்ள நிலையில் அரசாங்க கடன் 2016ஆம் ஆண்டு இறுதி வரையில் 79.3 வீதமாக அதிகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டு இறுதி வரையில் இலங்கை செலுத்த வேண்டிய முழுமையான கடன் 9,387 பில்லியன் ரூபாயாகும். இது 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 10.4 வீத அதிகரிப்பாகும். உள்நாட்டு ரீதியில் செலுத்த வேண்டிய கடன் 5,342 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. அது 7.7 வீத வளர்ச்சியாகும்.

வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனின் பெறுமதி 4,046 பில்லியன் ரூபாவாகும். 2016ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இது 14.2 வீத அதிகரிப்பாகும். அரசாங்கத்தின் முழுமையான கடன் தொகையில் உள்நாட்டு ரீதியாக 56.9 வீத கடனை செலுத்த வேண்டியுள்ளது. என்றுள்ளது.

Related posts: