அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் வெளியானது விசேட வர்த்தமானி!

Monday, September 18th, 2023

ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன், அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என கருதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும், எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம் மற்றும் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் சுகாதார அமைச்சர் வெற்றி பெற்ற போதிலும், சுகாதாரதுறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணப்படவில்லை என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரியவின் பதவி தொடர்பான கொடுப்பனவு மற்றும் ஏனைய சலுகைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: