தேர்தலிற்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

Saturday, October 5th, 2019

ஜனதிபதி தேர்தலுக்காக 450 கோடி ரூபாய்க்கும் அதிக நிதி ஒதுக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,தேர்தல் ஊக்குவிப்பு பதாதைகள் மற்றும் போஸ்ட்டர்களை அகற்றுவதற்கான தினம் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்நடவடிக்கையில் எவரேனும் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

இது குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட ஏனைய கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இக்கால கட்டத்தில் மேற்கொள்ளப்படும் நியமனங்கள் மற்றும் மாநில விழாக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டியது மிகவும் அவசியம் எனவும் தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்காக சுயாதீன குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஊடாக 30 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் ,அந்தவகையில் இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையானவர்கள் கட்டுப்பணம் செலுத்திய முதல் சந்தர்ப்பம் இது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் ஊடாக வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவடைகிற நிலையில், தங்களது விண்ணப்பத்தை அனுப்புகின்றவர்கள் அஞ்சல் ஊடாக அனுப்பாமல், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் அதனை கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts: