அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்தில் நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு- தவறாது இழப்பீட்டை பெற்றுக்கொள்ளுங்கள் – அழைப்பு விடுகிறார் அமைச்சின வடக்கு மாகாண இணைப்பாளர் ஜெகன்!

Wednesday, November 21st, 2018

எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ள யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களுக்கான நஸ்ட ஈட்டுத் தொகை வழங்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் யாவும் நிறைவடைந்துள்ளதாகவும் அன்றையதினம் நஷ்டஈடு பெற தெரிவுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் தவறாது சமுகமளித்து இழப்பீட்டுக்கான காசோலைகளை பெற்றுக்கொள்ளுமாறும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வடமாகாண இணைப்பாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் உரிய தரப்பினரிடம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

25ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்திற்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் வருகைதரவுள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து கடந்தகால யுத்தம் காரணமாக பாதிப்புற்றவர்கள் அதற்கான நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்வதற்காக புனர்வாழ்வு அதிகார சபைக்கு விண்ணப்பித்தவர்கள் தமது விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும், தேவையான விபரங்களைப் பெற்றுக்கொள்ளும்படியும் அமைச்சரின் இணைப்பாளர் கேட்டுள்ளார்.

குறித்த நிகழ்வின் போது பாதிக்கப்பட்ட 438 பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்கள் 106 பேருக்குமாக மொத்தம் 544 பேருக்கு இழப்பீட்டுக்கான காசோலைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது;

Related posts: