இலங்கையில் இந்தியாவை விட குறைந்த விலைக்கே எரிபொருளை விற்பனை செய்யப்படுகின்றது – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிப்பு!

Thursday, December 23rd, 2021

இலங்கையில் இன்றும் இந்தியாவை விட குறைந்த விலைக்கே எரிபொருளை விற்பனை செய்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 264 ரூபாவாக இருக்கும் ஒரு லீற்றர் பிரீமியம் பெற்றோல் இலங்கையில் 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பரிமாற்ற நெருக்கடி நீண்ட காலம் இருக்க மானியம் வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எரிபொருளுக்கான அந்நியச் செலாவணி வருவதைக் குறைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிழடயே

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் வழிமுறைகள் 2021 இறுதியளவில் அலுவல்சார் ஒதுக்குகள் 3 பில்லியன் டொலருக்கு மேலாகக் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் என்பதனை இலங்கை மத்திய வங்கியானது பொது மக்களுக்குத் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 நோய்த்தொற்றின் பொருளாதாரத் தாக்கத்தினால் ஏற்பட்ட சிக்கல்களுக்கும் வெளிநாட்டுத்துறையின் பாதகமான அபிவிருத்திகளினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களுக்கும் மத்தியில் இலங்கைப் பொருளாதாரம் 2021 ஆண்டு முழுவதும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினைக் காண்பித்தது.

நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் கொடுப்பனவு உள்ளடங்கலாக வெளிநாட்டுக் கடன்களை மீள்செலுத்துவதன் ஊடாக இலங்கை அதன் படுகடன் கடப்பாடுகளையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளதாகவும் மத்தியவங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: