நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருக்களை அனுமதித்தமை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்ப – யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் தெரிவிப்பு!

Wednesday, July 26th, 2023

நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுரு அனுமதித்தமை  மத நல்லிணக்கத்திற்கான ஆரம்ப புள்ளியாக பார்க்கின்றோம் என யாழ்  மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்,

இந்நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி  ஆலயத்திற்குள் நாட்டின் ஜனாதிபதி செல்வதாக இருந்தால் கூட மேலாடை கழற்றி செல்ல வேண்டும் என்பது ஆலய விதிமுறை.

அதற்கமைய  இன்றையதினம் இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் நானும் மேலும் ஒரு குருவும்  நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தோம்

உரிய நடைமுறைகளை பின்பற்றி நாங்கள் ஆலயத்தின் முன்றலில்  நின்று  வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் எங்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள்.

அந்த அழைப்பை ஏற்று  ஆலயத்திற்குள் நமது கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்று கந்தனை தரிசித்திருந்தோம், எனவே இந்த விடயமானது மத நல்லிணக்கத்திற்கான ஒரு முன்னுதாரணமாகும் மற்றும்  மத நல்லிணக்கத்திற்கான ஒரு ஆரம்ப புள்ளி என கூறலாம்

மேலும் எதிர்காலத்தில் நாங்கள் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இணைந்து செயற்படுவதற்கான ஒரு ஆரம்ப புள்ளியாக நாங்கள் பார்க்கின்றோம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: