நல்லாட்சி காலத்தின் தூரநேக்கற்ற அனுமதிகளால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இன்று பிரச்சினைகளுடன் வாழவேண்டியுள்ளது – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, January 12th, 2021

கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் தூரநோக்கற்ற வகையில் கொடுக்கப்பட்ட கடலட்டை அனுமதியே இன்று எமது வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் எல்லைதாண்டிய சட்டவிரோத கடலட்டை பிரச்சினைக்கு காரணமாதக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீ ரங்கேஸ்வரன் இது தொடர்பில் வடமராட்சி கிழக்கு பிரதேச கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்டாத வகையில் .ஒரு பொறிமுறையை இனங்கண்டு தீர்வு காண்பதே நன்மையளிக்கும் என தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றதுர். இதில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

கடலட்டை பிடிப்பது தொடர்பில் வடமாராட்சி கிழக்கு பிரதேச தொழிலாளர்கள் பெரும் அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டுவருகின்றனர். அதற்கான தீர்வு அவசியமானது.

இதற்கான தீர்வை எட்டுவதற்கு பிரதேச சங்கங்கள் கொடுக்கும் அனுமதிகளே காரணமாக இரக்கின்றது. இதை கட்டுப்படுத்த பிரதேசத்திலுள்ள சமாசங்களும் சங்கங்களும் ஒரு உபவிதியை உருவாக்கி போது ஏனையவர்கள் விரும்பாதிருக்கும்பொது முரண்பாடு தோன்றுகிறது

இதற்கு சங்கங்களும் சமாசங்களும் ஒருமித்த இணக்கபாட்டுடன் அனுமதி வழங்குவதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது சிறந்தது. இருதரப்பினரில் ஒருவர் முரண்பட்டாலும் அதை முன்னெடுப்பது பிரச்சினையானதாகவே அமையும். அதனடிப்படையில் அதற்கான பொறிமுயைறாக உபவிதிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் இந்திய கடற்றொழிலாளர்களது எல்லைதாண்டிய கடற்றொழிலாளர் பிரச்சினை என்பது ஒரு தேசிய பிரச்சினை ஆகும். அதுமட்டுமல்லாது இது தொடர்பில் அண்மையில் இலங்கை மற்றும் இந்திய துறைசார் அதிகாரிகள் மட்ட பேச்சுவாத்தையொன்றும் நடைபெற்றிரந்தது.

அதன்பின்னர் குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இதன்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பில் ஆராய்ந்து நிரந்தரமான ஒரு தீர்வை எட்டுவதற்கு தாம் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதேபோல கடலட்; தொடர்பில் உள்ளூர் சமாசங்கள் மற்றும் சங்கங்களின் ஒத்துழைப்பினூடாக ஒரு இணக்கப்பாட்டுடனேயே தீர்வ காணப்படுவது அவசியம் என்றும்; அவர் சுட்டிக்காட்டியிருந்தமமை குறிப்பிடத்தக்கது.

Related posts: