மே மாதம் இடம்பெற்ற அமைதியின்மை – 3000 க்கும் மேற்பட்டோர் கைது என பொலிஸார் தெரிவிப்பு!

Saturday, July 2nd, 2022

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடாளாவிய ரீதியாக ஏற்பட்ட வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பாக இதுவரை 3000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1150 பேர் விளக்கமறியலிலும் 1900 பேர் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் 857 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த தினத்தில் 70 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட குறைந்தது 100 அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை தீயிட்டு சேதமாக்கப்பட்டன.

அத்தோடு அரசு சார்பு போராட்டக்காரர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் உட்பட 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதோடு சேதமாக்கப்பட்டன.

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி போராட்ட தளங்கள் மீதான தாக்குதல் தொடர்பாக இதுவரை 30 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்தமை தொடர்பில் இதுவரை 30க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: