அரச மருத்துவ அதிகாரிகள் கண்டன போராட்டத்தில்!

Thursday, June 22nd, 2017

பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் இன்று கண்டன போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்

இதற்கமைய அவர்கள் இன்று காலை 8 மணி முதல் இந்த கண்டன போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுமாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டபேரணி மீது காவற்துறையினர் மேற்கொண்ட தாக்குதலின் போது, 96 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்

அவர்களும் 57 மாணவர்கள் தொடர்ந்தும் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காயமடைந்தவர்களுள் 23 மாணவிகளும் 5 காவற்துறையினரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடை செய்ய கோரி, அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் நேற்று கொழும்பு நகர மண்டப பகுதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சுக்குள் பிரவேசித்தமையை அடுத்து அங்கு, அவர்கள் மீது நீர் தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அரச வைத்திய அதிகரிகள் நடத்தும் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று பகல் தீர்மானிக்கப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

Related posts: