நல்லிணக்கத்துக்கு எதிரானவர்களின் வலையில் சிக்காதீர்! – பிரதமர் ரணில் வேண்டுகோள்!

Tuesday, December 13th, 2016

“நல்லிணக்க நடவடிக்கைகளையே சர்வதேசம் வரவேற்கின்றது. குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டு நல்லிணக்கத்துக்கு எதிராகச் செயற்படுபவர்களின் வலையில் நாட்டு மக்களே சிக்கிவிடாதீர்கள்.” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நுகேகொடையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“புதிய அரசமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மை இடம்கொடுக்க வேண்டும் என்பதில் அரசியல் ரீதியில் எவ்வித பிரச்சினையும் இல்லை. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பது போல் ஏனைய மதங்களுக்கும்  அங்கீகாரம் கொடுங்கள் என்றுதான் ஏனையவர்கள் கூறுகின்றனர்.

இந்த நாட்டில் இன, மத அடிப்படையில் பேதங்கள் காணப்பட்டபோது நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு நாட்டு மக்கள் ஒன்றிணைந்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர். நாங்கள் தேசிய அரசொன்றை அமைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே மத்தியஸ்தம் கொடுத்து வருகின்றோம்.

தற்போதைய அரசு முன்னெடுத்து செல்லும் இந்த நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு சர்வதேசம் பூரண ஆதரவு வழங்குகின்றது. இது தொடர்வதையே சர்வதேசம் விரும்புகின்றது. குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டவர்களுக்காக இந்தப் பெயர அசிங்கப்படுத்தவும் அழிக்கவும் இடமளிக்க வேண்டாம்” – என்றார்.

tkn-10-07-nt-90-huc

Related posts: