தேசிய திட்டத்திற்கு அமைவாக நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்பு!

Thursday, February 24th, 2022

தேசிய திட்டத்திற்கு அமைவாக கொழும்பு உட்பட நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்..

அலரிமாளிகையில் நடைபெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படும் நகர்ப்புற மீளுருவாக்கத் திட்டம் மற்றும் கொழும்பு நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டத்திற்கான ஆதரவுத் திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நகர்ப்புற முறைசாரா குடியேற்றங்களுக்கு பதிலாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் 2010 ஆம் ஆண்டு பிரதமர் ஜனாதிபதியாக இருந்தபோதே தொடங்கப்பட்டது என நகர அபிவிருத்தி

2024 ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புற குறைந்த வசதிகொண்ட குடியிருப்புகளுக்கு பதிலாக 50,000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதானமாக கொழும்பிலுள்ள குறைந்த வசதி கொண்ட குடியிருப்புகளை அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றுவதே பிரதான நோக்கமாகும். இதன்படி, 14,611 வீடுகள் ஏற்கனவே பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 5590 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் கலாநிதி எம்.எம்.எஸ்.எஸ்.பி யாலேகம பிரதமரிடம் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டங்களின் முதல் காலாண்டின் முன்னேற்றம் மற்றும் எதிர்வரும் காலாண்டுகளுக்கான எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார அவர்கள் முன்வைத்தார்.

மேலும், சீன மானியத்தின் கீழ் 1996 வீடுகள் கிடைத்துள்ளதாகவும், தெமட்டகொட, பேலியகொட, மொரட்டுவ, மஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் இந்த வீட்டுத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் உதய நாணயக்கார அவர்கள் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்குள் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான இந்தத் திட்டங்கள் அனைத்தையும் நிறைவு செய்ய திட்டமிடுமாறு நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் அறிவுறுத்தினார்.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் கொழும்பில் ஆப்பிள் தோட்டம் மூன்று கட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்படும் 400 வீடுகள், கிம்புலாஎலயில் 472 வீடுகள் மற்றும் மஹரகமவில் 600 வீடுகள் நிர்மாணிக்கப்படுதல் உட்பட பல திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதனிடையே வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அரச திணைக்களங்கள் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் இது தொடர்பாக அடையாளம் காணப்பட்ட பெறுமதிமிக்க காணிகள் தொடர்பான திட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும் அதிகாரிகள் முன்மொழிவுகளை முன்வைத்தனர்.

அதற்கமைய தேசிய திட்டத்திற்கு அமைவாக அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது முக்கியமானது என பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: