முச்சக்கரவண்டிகளை மீற்றர் கட்டணமில்லாமல் இயக்க முடிவு!

Monday, August 26th, 2019


மாதாந்தம் பெட்ரோல் விலையில் அதிகரிப்பு செய்யப்படுவதன் காரணமாக இலங்கை சுயதொழில் வல்லுனர்களின் தேசிய முச்சக்கர வண்டி கூட்டமைப்பு, தமது முச்சக்கரவண்டிகளை மீற்றர் கட்டணமில்லாமல் இயக்க முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

மாதாந்தம் பெட்ரோல் விலை உயர்வடைவதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மீற்றர் விகிதங்களை மாற்றும் போது தாங்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அத்துடன் 150,000 இற்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டிகளில் பயண கட்டணங்கள் மீற்றரால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் மாதாந்தம் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, ஒரு கிலோமீற்றருக்கு வசூலிக்கப்படும் தொகையை நாங்கள் மாற்ற வேண்டும்.

அத்துடன், அதிகரித்து வரும் கட்டணத்தின் விளைவாக, மக்கள் தங்கள் போக்குவரத்து தேவைகளுக்கு முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். அதன் காரணமாகவே மீட்டர் கட்டணங்களை அகற்றவோ அல்லது மீற்றர்களை அணைப்பதன் மூலம் பயணிகளை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Related posts: