தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

Tuesday, February 20th, 2024

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும் போதே, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கல்வியற் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கடன் பெறுவதற்கான யோசனை ஒன்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கவில்லை.

இந்தநிலையில், அவர்களுக்கான உணவுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் அதற்கு நிதிப் பற்றிய குழு அனுமதி வழங்கியதுடன், நேற்றைய தினம் அதனை உறுதிப்படுத்தியது.

இதற்கமைய, 8 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இலங்கையின் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்: யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ...
எதிர்வரும் புதனன்று உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் - பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை - தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெர...