யாழில் மாமியாரை தாக்கிய மருமகன்!

Tuesday, June 18th, 2019

உடுவில் அம்பலவாணர் வீதியை சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அயலவர்களால் அம்புலன்ஸில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சீதனமாக காணியொன்றை வழங்குமாறு கோரி மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயோதிபப் பெண்ணின் மகளின் கணவரே தாக்குதலை நடத்தியுள்ளார். அவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

“வயோதிபப் பெண்ணின் காணி ஒன்றை தமக்கு எழுதி வழங்குமாறு மருமகனான சந்தேகநபர் கேட்டுள்ளார்.

ஏற்கனவே சீதனமாக காணி ஒன்று வழங்கப்பட்டுள்ளதால், தன்னிடமுள்ள மற்றைய காணியை சிறப்புத் தேவையுடைய மகனுக்கு தேவை என்று மாமியார் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் காணியை எழுதி வழங்குமாறு மருமகன் இன்று மாமியாரைத் தாக்கியுள்ளார்” என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts:

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எந்த அடிப்படையில் பதவி வழங்கப்பட்டது - அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க...
கொரோனா தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை : உயிர்ப்பலிகள் வேகம் அதிகரிக்கும் - உலக சுகாதார நிறுவ...
தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுங...