டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் 250 முன்னணி பாடசாலைகள் தெரிவு!

Friday, February 23rd, 2018

நாடளாவிய ரீதியில் அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 250 பாடசாலைகளை இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக், கல்வி அமைச்சுடன் இணைந்து மறுசீரமைப்பதற்கு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

இத்திட்டத்திற்காக மேற்படி நிறுவனம் 430 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதுடன், நெசன ஸ்மார்ட் பாடசாலை என இவ்வேலைத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் 2020 வரை ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள இவ்வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு டிஜிட்டல் கற்றல் உபகரணங்களும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான பயிற்சி என்பனவும் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை மேற்படி நிறுவனம் 2003 ஆம் ஆண்டில் இருந்து க.பொ.த. சாதாரண, உயர்தர மாணவர்களுக்கு அவர்கள் பரீட்சையில் காட்டிய திறமைக்காக விசேட புலமைப்பரிசில்களையும் வழங்கிவருகிறது. இதுவரை 700 ற்கும் அதிகமான மாணவர்கள் இப் புலமைப்பரிசிலை பெற்றுள்ளனர். இதற்கென 100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் மய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் 2,000 பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் அனுமதியுடன் கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: