முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!

Saturday, February 17th, 2024

காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார். 1941 ஜனவரி 29ஆம் திகதி பிறந்த ஐ.தே.க. முன்னாள் தவிசாளர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான காமினி பெரேரா மரணிக்கும் போது 83 வயதாகும்.

கிராம சபை உறுப்பினரான இவர், 1968 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டார். 1977 இல் பாராளுமன்ற உறுப்பினரான இவர், 1978 இல் குருணாகல் மாவட்ட அமைச்சராக செயற்பட்டார்.

1987 இல் வடமேல் மாகாண சபை முதலமைச்சராக இருந்த இவர், 1994 இல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், 1998 இல் எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார். இறுதியாக 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, சுகவீனமுற்ற முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் நலன் விசாரிப்பதற்காக கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி கட்டுகம்பலையில் உள்ள அவரின் இல்லத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தார்.

இதன்போது முன்னாள் அமைச்சரின் நலன் பற்றி விசாரித்த ஜனாதிபதி, அவருடன் சிறிது நேரம் உரையாடலிலும் ஈடுபட்டதோடு, குடும்ப உறுப்பினர்களிடம் அவர் பற்றிய தகவல்களை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: