இந்திய அரசின் நிதியுதவி – இன்று எழிமையான முறையில் திறந்து வைக்கப்படுகிறது யாழ்ப்பாணம் கலாசார மையம்!

Monday, March 28th, 2022

இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று திங்கட்கிழமை எளிமையாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் 12.30 மணியளவில் காணொளி முறையில் எளிமையாக திறந்து வைக்கப்படவுள்ளது.

ஆனாலும் யாழ்ப்பாண பண்பாட்டு மையம் வெகுவிமரிசையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த பண்பாட்டு மையம் குறித்து அறிவிக்கப்பட்டது.

1.6 பில்லியன் இந்திய நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு கட்டுமாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில்  திறப்பு விழாவிற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தநிலையில் இன்றைதினம் எளிமையாக திறந்து வைக்கப்பட உள்ளது.

இதேவேளை யாழ் கலாசார மண்டபம் என்பது வெறுமனே யாழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ள தமிழ் புத்திஜீவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 2011 இல் இந்தியாவிற்கு மேற்கண்ட விஜயத்தின் போது அன்றைய இந்திய பிரதமரிடம் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றாகவெ கிடைக்கப்பெற்றது என தெரிவித்துள்ளனர்.

டக்ளஸ் தேவானந்தா, திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அம்மையாரை முதல்வராக கொண்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த யாழ் மாநகரசபையின் ஆட்சி காலத்தில் இதற்கான பூர்வாங்க வேலைகள் யாவும் நிறைவுபெற்ற நிலையில், பூரணத்துவம் பெற்ற கலாசார மண்டபம் 28/3/2022 இன்று திங்கள்கிழமை மக்களின் திறக்கப்படுகின்றது

இந்திய உதவியுடன் 12 மாடிகளுடன் கொண்ட மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கலாச்சார மையமானது 600 பேரை உள்ளடக்கக் கூடியதான வசதிகளுடன் கூடிய திரையரங்கப் பாங்கிலான திட்ட ஏற்பாட்டுடனான மண்டபம், இணையதள ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய பல்நோக்கு அமைப்பிலான நூலகம், கண்காட்சி மற்றும் கலைக்காட்சி வெளியிடம், அருங்காட்சியகம், நிறுவன அலகுகள், சங்கீத மற்றும் அதனுடன் இணைந்த இசைக்கருவிகள், நடனங்கள், மொழிகள் உள்ளிட்ட வகுப்புக்களை நடத்துவதற்கான வசதிகளும் இங்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: