இலங்கைக்கான கடன்தொகையை அதிகரித்தது ஆசிய அபிவிருத்தி வங்கி !

Saturday, May 7th, 2016
இலங்கைக்கான கடன்தொகையை மேலும் அதிகரிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநயக்க தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் ஜேர்மனில் நடைபெற்ற 49ஆவது நிதி அமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு இன்யைதினம் நாடுதிரும்பிய நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க குறித்த மாநாடு தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த மாநாட்டில் பங்கேற்றமை மகிழ்ச்சியளிப்பதோடு இந்த விஜயம் வெற்றிகரமாகவும் அமைந்துள்ளது. இந்த விஜயத்தின் போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் மட்டக்குழுவுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

 இலங்கையின் பொருளதார தற்போதைய பொருளாதார நிலைமை எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியானது ஏற்கனவே இலங்கைக்கு 250மில்லியனை கடனுதவியாக வழங்கியுள்ளது.

இந்த தொகையை தற்போது ஆயிரம் மில்லியனதாக அதிகரிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளதோடு அத்தொகையை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளது.

Related posts:

விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாக காரணம் ...
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரமும் தொடரும் - மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமை...
2024 ஆம் ஆண்டுமுதல் மும்மொழி மாவட்டமாக பெயரிடப்படுகின்றது பாதுளை மாவட்டம் - மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்...