வடமராட்சி குண்டு வெடிப்பு தொடர்பில் 3 கோணங்களில் தீவிர விசாரணை – பொலிஸ் பேச்சாளர் சாலிய சேனாரட்ண தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் சிறு குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கிறோம் என பொலிஸ் பேச்சாளர் சாலிய சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த சம்பவத்தின் பின்னால் சிறு குழு ஒன்றின் மீதே நாங்கள் சந்தேகிக்கிறோம் என்றும் அதனடிப்படையில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் தீவிரமான விசாரணைகளில் இறங்கியிருக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் எந்தவகையான? உள்நாட்டு தயாரிப்பா? என்பனபோன்ற விடயங்கள் தொடர்பாக தனியான விசாரணை இடம்பெற்றுவருவதாக கூறிய அவர், இந்த சம்பவம் பொலிஸாரை இலக்குவைத்துதான் நடத்தப்பட்டதா? அதற்காக திட்டமிடல்கள் இடம்பெற்றதா? என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே யாழ்ப்பாணம் வலி வடக்கு குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கிணற்றினை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அதற்குள் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விசேட அதிரடி படையினருடன் வந்த பொலிஸார் அங்கிருந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: