மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பம்!

Monday, July 6th, 2020

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இரண்டாம் கட்டமாக அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் ஆரம்பித்துள்ளன.

அதனடிப்படையில் தரம் 05, 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் கற்பித்தலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 5 முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதுடன், தரம் 13 மாணவர்களுக்காக காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: