போக்குவரத்துக்கு இடையூறாகத் திரியும் கட்டாக்காலிகள் பிடிபட்டால் இனி ஏலத்தில் விற்கப்படும்! பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

Thursday, May 10th, 2018

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் வீதியில் அலைந்து திரியும் கட்டாக்காலிகள் பிரதேச சபையினால் பிடிக்கப்பட்டு ஏலத்தில் விற்கப்படும் எனப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்தக் கூட்டம் சபை மண்டபத்தில் தவிசாளர் ம.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கட்டாக்காலிகளின் தொல்லை குறித்தும் இதனால் மக்களுக்கும் போக்குவரத்திற்கும் ஏற்படும் இடையூறுகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டு இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆடு மாடுகளை வளர்ப்போர் அவற்றைக் கட்டி வளர்க்குமாறும் தவறும் பட்சத்தில் இம்மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலிகள் பிரதேச சபையினால் பிடிக்கப்பட்டு 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபையின் சட்டத்தின் 66 ஆம் பிரிவுக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: