மக்கள் நலம் சார்ந்தவர்களாலேயே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பாக வகுக்க முடியும் – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Thursday, May 20th, 2021

நல்லாட்சி என்ற அரசில் செயற்படுத்த முடியாத பல்வேறு திட்டங்களை கடற்தொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருவதானது மக்கள் நலன் சார்ந்து உழைப்பவர்களாலேயே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பாக வகுக்க முடியும் என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளதுக் காட்டியுள்ளது என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

கரவெட்டி, கரணவாய் மேற்கு, மண்டானில் இறால் அறுவடைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு மண்டான் கிராமிய மீனவர் அமைப்பின் உபதலை வர்கிட்டினன் நந்தகுமார் தலைமையில் சுகாதார விதிமுறைக்கு அமைவாக மண்டான் நாச்சிமார் கோவிலடியில் எளிமையாக நடைபெற்றது. அதில் கடற்தொழில் அமைச்சரின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரசில் கடல்தொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொறுப் போற்றதன் பின்னர் இப்பரதேசத்தில் ஏரிகள், குளங்கள் மற்றும் களப்புகளில் அன்றாட சீவியத்திற்கான தொழில்களில் ஈடுபடும் வறிய மக்களின் வாழ்வியலை உயர்த்தும் நோக்குடன் பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகின்றார். அதன் ஒருகட்டமான செயற்பாடே மண்டான் மற்றும் தொண்டமனாறு களப்பு நீரேரியில் இறால் வளர்ப்புமற்றும் மீன்குஞ்சுகள் வளர்ப்பு போன்ற திட்டங்கள் ஆகும்.

இதனூடாக இப்பிரேசத்தில் நீரேரியில் தொழிலில் ஈடுபடும் உடுப்பிட்டி, முதலைக்குழி ,மத்தொனி மற்றும் அச்சுவேலி வடக்கு, தொழிலாளர்கள் பயனடைவார்கள். அதேபோன்று அம்பன் ,குடத்தனை மற்றும் நாகர்கோவில் தெற்கு களப்புக்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் எல்லாம் எமது மக்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்குடனேயே செயற்படுத்தி வருகின்றோம்.

ஆனால் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் கடந்த நல்லாட்சி என்ற அரசில் செல்வாக்கு மிகுந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக கூட்டமைப்பினரும், இராஜாங்க மந்திரிகளாக, பிரதியமைச்சர்களாக, ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களாக வலம் வந்தனர்.

அவர்களால் இந்த ஏழை மக்கள் அடைந்தபலன் என்ன? வடக்கு மாகாண சபையில் மீன் பிடி அமைச்சும் இருந்தது. முன்னாள் முதலமைச்சர் அல்லது மீன்பிடி அமைச்சர் அவர்களால் இம்மக்களுக்கு எதனையாவது பொற்றுக் கொடுக்க முடிந்ததா? வாக்குகளுக்காக வீறாப்பு பேசுபவர்களால் மக்கள்நலன் சார்ந்து சிந்திக்கமுடியாது. தங்கள் நலன் சார்ந்துமட்டுந்தான் எண்ணிக்கொண்டிருக்க முடியும் எனவும் அவர்மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கடற்தொழில் பரிசோதகர் ,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாகச் செயலாளர் இந்திரராசா துஷிகரன், மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.

Related posts: