2021 ஆம் ஆண்டுமுதல் ஐரோப்பிய ஒன்றிய GSP + இன் அதே நன்மைகளை இலங்கை பெறும் – பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகத் துறை அறிவிப்பு!

Tuesday, November 17th, 2020

இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி முடிந்ததும், ஐரோப்பிய ஒன்றியத்திதுடனான உலகளாவிய சுங்க கட்டணங்களை பிரித்தானியா புதுப்பிக்கும் அதேவேளை இது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்முதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தக பொருட்களை ஏற்றுமதி செய்யும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் சலுகையாக GSP+ வரிச்சலுகை காணப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்திற்கு இலங்கையின் ஏற்றுமதிக்கான முக்கிய சந்தையாகவும், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகவும் பிரித்தானியா காணப்படுகின்றது.

இந்நிலையில் பிரெக்சிற்கு பிந்தைய காலகட்டத்தில் பிரித்தானியாவுடன் வர்த்தகம் செய்யும் போது பிரெக்ஸிட்டுக்கு முன்னர் இருந்த அதே நன்மைகளை இலங்கை பெறுவது முக்கியம் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 2021 ஜனவரி 1 ஆம் திகதிக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. தகுதி வாய்ந்த நாடுகளுக்கு குறித்த திகதிமுதல் பிரித்தானியாவின் ஜி.எஸ்.பி. மூலம் முன்னர் வழங்கப்பட்ட அதே கட்டண சலுகைகளை பெற முடியும் என்று பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவின் GSP+ வரிச்சலுகை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதாவது 2023 ஆம் ஆண்டு வரை அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: