அனுமதி அட்டைகள் விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் – பரீட்சைகள் திணைக்களம்!

Friday, July 13th, 2018

க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான அனுமதி அட்டைகள் விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5ம் திகதி நடைபெறவுள்ள தரம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான அனுமதி அட்டைகளை அடுத்து வரும் இரண்டு நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இந்த இரண்டு பரீட்சைகள் சார்ந்த மேலதிக வகுப்புக்களை ஐந்து தினங்களுக்கு முன்னதாக நிறுத்த வேண்டியது அவசியம். இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குரிய வினாத்தாள்களை வாசித்துப் புரிந்துகொள்ள மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக 10 நிமிடம் அவகாசம் வழங்கப்படுமென்றும் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித்த மேலும் குறிப்பிட்டார்.

Related posts:


தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினால் தேசத்துரோக் குற்றம் - எவ்வித கருணையும் காட்டப்படாது என கடும் எச்...
நீக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடுகள் – சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொ...
விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் மினுவாங்கொடையில் குற்றக் கும்பலைச் ...