புதிய இரு அமைச்சுகளுக்கான விடயப்பரப்பு அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Friday, June 10th, 2022

இரண்டு புதிய அமைச்சு பதவிகளை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அமைச்சுகளின் கீழ் உள்ளடங்கும் திணைக்களங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பன குறித்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சில நிறுவனங்கள் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த அமைச்சின் கீழ், ஸ்ரீலங்கா டெலிகொம், தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, தேசிய முதலீட்டுச் சபை, ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், துறைமுகநகர் பொருளாதார ஆணைக்குழு, தரக்கட்டளை நிறுவகம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவகம் (ICTA), தாமரை கோபுரம், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்யப்பட்டு நேற்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: