தனியார் பௌசர்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை!

Wednesday, July 26th, 2017

கனியவள சங்கங்களின் போராட்டத்தை கைவிடுமாறு அரசு கோரியுள்ளது. எரிபொருள் விநியோக நடவடிக்கை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில்,எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இணைந்து கொள்ளாத தனியார் எரிபொருள் பௌசர்களின் அனுமதிப்பத்தித்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முத்துராஜவல மற்றும் கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலைகளில் இருந்து எரிபொருள் விநியோக நடவடிக்கை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதுடன், அங்கு எரிபொருள் பௌசர்களை செல்லுமாறு, அத்திணைக்களம் கேட்டுள்ளது.இதேவேளை, எரிபொருள் விநியோக நடவடிக்கை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்பட்டுள்ள நிலையில், பணிக்கு திரும்பாத கனிய எண்ணெய் சேவையாளர் பணியில் இருந்து தாமாகவே விலகியதாக கருதப்படுவர் என, அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது

Related posts: