சீன பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு- முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்வு!
Friday, June 18th, 2021
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சுரேஷ் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் பரஸ்பரம் கலந்துரையாடியிருந்தனர்.
மேலும் இந்த கலந்துரையாடலின்போது, சீன தனது புதிய விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளமைக்காக ஜெனரல் குணரத்ன தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு ஆசிரியர்களுக்கு கைவிரல் பதிவேடு கட்டாயம்!
தனியார் நிறுவனங்களுடன் இன்று அவசர கலந்துரையாடல்!
விளையாட்டுத்துறையில் புதிய மாற்றம் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|


