சீனாவிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் அதிகரிப்பதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிவர்த்தனை ஒன்றினை மேற்கொள்வதற்கு சீன மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த வாரத்தில் குறித்த தொகை நாட்டுக்கு கிடைக்கப்பெறும் என திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இந்த பரிவர்த்தனை நடவடிக்கையினூடாக இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது 1.5 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா வைரஸ்: ஆபத்து குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
அரச பேருந்தில் பயணிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்றினால் இழப்பீடாக 10,000 உயிரிழந்தால் 50,000 - பற்றுச...
மாகாண சபைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க ஜனாதிபதி அலுவலகம் ஒத்துழைப்பு வழங்க தய...
|
|