கொரோனா வைரஸ்: ஆபத்து குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Tuesday, March 31st, 2020

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை உடனடியாக நிறுத்திவிட முடியாதென உலக சுகாதார அமைப்பின் அவசர சேவை இயக்குனர் வைத்தியர் மயிக் ரயன் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை மூலமே வைரஸை பரவலை தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மேல் நோக்கி செல்லும் வளைவை எவ்வாறு தட்டையாக்குவது என்பது பற்றி பெரும்பாலான மக்கள் பேசுகிறார்கள். அது அப்படி செய்வதென்பதே பிரச்சினையாகும். மக்களை வீட்டுக்குள் மட்டுப்படுத்துவதன் மூலம் மாத்திரம் அதனை செய்து விட முடியும்.

உண்மையாகவே வைரஸில் தொற்றும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதேபோது பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளை இரட்டிப்பாக அதிகரிக்க வேண்டும்.

வைரஸ் பரவல் இயற்கையாக முடிவுக்கு வந்துவிடாது. நாங்களே அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைரஸ் பரவலை குறைப்பதற்காக மக்கள் வீட்டில் இருத்தல் வேண்டும். அப்போது வைரஸ் பரவும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். ஒருவரின் உடலில் வைரஸ் தொற்றியிருந்தால் அது பரவும் அளவு குறைவடையும். தொற்று நிலைமையை கட்டுப்படுத்தும் போது இது மிகவும் முக்கியமானதாகும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: