சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கை – வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிப்பு!

Saturday, July 29th, 2023

வடக்கு ௲ கிழக்கு மாகாணத்தில் சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சதொச விற்பனை நிலையங்களை மேம்படுத்துவது குறித்து மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது  குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் – “ இன்று தனியார் வர்த்தக நிலையங்களில் விலைகள் குறைக்கப்படாத நிலையில் விற்பனைசெய்துவரும் நிலையில் குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்களை விற்பனை செய்யவேண்டிய நிலை அரசாங்கத்திற்கு உள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கிழக்கு மாகாணத்தில் 10 சதொச விற்பனை நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சதோச அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் அதிகாரிகள், சதொச விற்பனை நிலையங்களின் முகாமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் புதிய சதொச விற்பனை நிலையத்தினை நிறுவுவது குறித்தும் நட்டத்தில் இயங்கும் நிலையங்களை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

அத்துடன் வறிய மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சதொசவினை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: