சட்டவிரோத மீன்பிடியிலீடுபட்ட 32 மீனவர்கள் கைது!
Monday, April 25th, 2016
வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிரதேசங்களில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுண்டிக்குளம்,வெற்றிலைக்கேணி கடற் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 30 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்திருப்பதாகவும் கிழக்கு கடற்படையினரால் மட்டக்களப்பு-பெரிய உப்போடை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இருவரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 32 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களிடமிருந்து மீன் பிடிக்கு பயன்படுத்தப்பட்ட வாயு சிலின்டர்,உள்ளிட்ட உபகரணங்களையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதோடு, இவர்கள் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மீன்பிடி அலுவலகத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|
|


