வீதி அகலிப்பின் போது பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களது நலன்களும் பூர்த்திசெய்யப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Wednesday, January 25th, 2017

வீதி அகலிப்புச் செய்யப்படும்போது காணி உரிமையாளர்களிடமிருந்து காணிகள் சட்டப்படி சுவிகரிப்பு செய்யப்படவேண்டும் என்பது விதிமுறை. ஆனால் பருத்தித்துறை மருதங்கேணி வீதி அகலிப்பின்போது  அத்தகைய செயற்பாடுகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் முன்னாள் பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்  சுட்டிக்காட்டியுள்ளார்.

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பின் போது வீதியின் இரு புறங்களில் உள்ள உயிர் மரங்கள் அகற்றப்படுவது தொடர்பாக பிரதேச செயலகத்தில் அதன் செயலர்  கனகசபாபதி கனகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி அகலிப்பின்போது சுவிகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களது மதில்கள் மற்றும் வேலிகளை வீதி அதிகார சபை மீளமைத்து கொடுத்திருந்தது. ஆனால் தற்போது புருத்தித்துறை – மருதங்கேணி வீதி அபிவிருத்தியின் போது அவ்வாறான ஒரு நிலைமை உருவாக்கப்படவில்லை. கையகப்படுத்தப்படும் காணிகளை உரிய சட்ட முறைப்படி பெற்றுக்கொள்ளவும் இல்லை என்பதுடன் அவர்களுக்கான இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.

எனவே குறித்த விடயத்தை சட்டரீதியாக நடைமுறைப்படுத்தி  காணி உரிமையாளர்களுக்கு மதில்கள் மற்றும் வேலிகளை மீளமைத்து கொடுப்பதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் குறித்த வீதி அகலிப்பின்போது  சுவிகரிக்கப்பட்ட காணிகளில் இருந்த பயன்தரு மரங்களான வேம்பு, மா, நாவல், பனை, தென்னை உள்ளிட்ட பல மரங்கள் அகற்றப்பட்டன. அவற்றை எல்லாம் மரக்கூட்டுத்தாபனம் எடுத்து சென்றுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். சட்டரீதியாக காணிகள் சுவிகரிக்கப்படாத நிலையில் மரங்களும் எடுத்து செல்லப்படுவதால் குறித் காணிகளின் உரிமையாளர்கள் பலர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

குறித்த பிரச்சினையை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சர் ஐங்கரநேசன் சட்டமுறைப்படி காணிகள் கையகப்படுத்தப்படாத காரணத்தால் மரங்களை மரக்கூட்டுத்தாபனம் எடுத்துச்செல்ல முடியாதென்றும் அதனை உடனடியாக நிறுத்தி  காணிகளுக்கு உரியவர்களிடம் அவற்றை கொடுக்கும்படி துறைசார்ந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்

இதனிடையே குறித்த வீதியின் 16 ஆம் கட்டை மற்றும் 17 ஆம் கட்டைக்கிடைப்பட்ட பகுதியில் வீதியின் இருபுறமும் மகிழமரங்கள் அதிகம் இருப்பதனால் அவற்றை அகற்ற வேண்டாம் என்றும் இதற்கு பதிலாக வீதியின் தெற்கு பகுதியில் முழுமையாக காணி சுவீகரித்து வீதியை அகலிப்பு செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வீதி அதிகாரசபை தாம் அவ்வாறு மேற்கொள்வதற்கு தமக்கு ஒரு நீடித்த காலப்பகுதி வேண்டும் எனவும் அவ்வாறு வழங்கப்பட்டால்தான் குறித்த பகுதியை அகலிப்பு செய்ய முடியும் என்றும் தெரிவித்தனர்.

16326925_1303510079688076_377997125_o

16326110_1303510019688082_1606680890_o

Related posts: