யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

Saturday, March 27th, 2021

வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆ.கேதீஸ்வரன் இவர்களில், யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவர்கள் இருவரும் தாதியர்கள் மூவரும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் நேற்றையதினம் 634 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள் இருவர், தாதிய உத்தியோகத்தர்கள் மூவர், சுகாதார ஊழியர்கள் நால்வர், மருத்துவ பீட மாணவர்கள் இருவர், தாதிய மாணவர் ஒருவர் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: