கிருமி தொற்று நீக்கிகளை தெளிப்பது மிகுந்த ஆபத்தானது – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை!

Thursday, May 7th, 2020

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மனிதர்கள் மீதும் சுற்றுச் சூழல் மீதும் கிருமி தொற்று நீக்கிகளை தெளிப்பதனை அனுமதிக்க முடியாது என மருத்துவர் சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் மருத்துவர் சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அந்த அறிவிப்பில் – மிதமிஞ்சிய அளவில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும் போது அது மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவில் கிருமி தொற்று நீக்கிகளை சுற்றாடலில் தெளிப்பதனால் கிடைக்கப்பெறும் நன்மைகளை விடவும் தீமைகள் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிருமி தொற்று நீக்கி தெளிக்கும் சிறிய கூடாரங்கள் அல்லது வேறும் வழிகளில் மனிதர்கள் மீது தெளிக்கும் போது நோய் குணமாகாது எனவும் மாறாக சுவாசப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் அறிக்கையின்படி அனைத்துத் தகவல...
பாகிஸ்தான் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கையின் அர...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டத்தை அமுல்படுத்த தவறிவிட்டார் - வன்முறைகளுக்கு அடக்கு முறை தா...