அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை பொற்றுக்கொள்ள இலங்கை கடும் முயற்சி – இங்கிலாந்து சாதகமான பதிலளித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021

இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பொற்றுக்கொள்வதற்கான இலங்கை மேற்கொண்டுவந்த இலங்கையின் முயற்சிக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பதிவாகும் அதிகளவிலான நோயாளிகள் மற்றும் இறப்புக் காரணமாக சீரம் நிறுவனத்தால் கோஷீல்ட் தடுப்பூசிகளை வழங்க முடியாத நிலையில் வேறு தரப்பிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள திட்டமிடுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒரு மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து நேர்மறையான பதில் கிடைத்ததாகவும் தற்போது இரு அரசாங்கங்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவிலிருந்து தேவையான பங்குகளையும் கோரியுள்ளதாகவும் மேலும் கோஷீல்ட்டின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி போடுவதற்கான பங்குகளை பெற்றுக்கொள்ள முடிந்தவரை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அந்தந்த நாடுகளின் முகவர்களுடன் கலந்துரையாடுவதோடு மட்டுமல்லாமல், திறந்த சந்தைகளில் தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் முயற்சி எடுத்துவருவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: