நிவாரண நடவடிக்கைகளுக்கு படையினர் இணைத்துக் கொள்ளப்படுவர் – ஜனாதிபதி!

Saturday, January 14th, 2017

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு முப்படையினரின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு மேலதிகமாக படையினர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

திருகோணமலை சீன துறைமுக கடற்படை முகாமில் இன்று இடம்பெற்ற புதிதாக இணைந்து கொண்டுள்ள வீரர்களை வழியனுப்பும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முறையான வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டின் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்காக முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், நாட்டின் முப்படைத் தளபதி என்ற வகையில் அதனை தான் மதிப்பதாகவும் கூறினார்.  அத்துடன் முப்படையினர் தொடர்பில் தான் மிகவும் நம்பிக்கையுடன் செயற்படுவதாகவும் கூறினார்.

maithiripala-55445d1

Related posts:


மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று முதல் Rapid Antigen பரிசோதனை – இதுவரை 117 மரணங்கள் கொ...
இலங்கையில் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்த அனுமதி - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்...
மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை - ஜீவன் தொண்டமான் தெரிவி...