எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் அறிக்கையின்படி அனைத்துத் தகவல்களும் வெளிப்படுத்தப்படும் – மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவிப்பு!

Friday, June 4th, 2021

தீ அனர்த்தத்துக்குள்ளாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்த கொள்கலன்களில் என்ன இருந்தது, என்பதையும் அந்த கொள்கலன்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தவர்கள் யார் என்பதையும் மிக விரைவில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், கப்பலின் அனைத்துக் கொள்களன்களிலும் இருந்த பொருட்களை வேறுவேறாக அடையாளம் காண்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு எழுத்துமூல கோரிக்கையொன்றை அனுப்ப எதிர்பார்ப்தாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சிரிபால அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கப்பலின் கொள்கலன்களில் இருந்த பொருட்கள் என்ன என்பதை உறுதிப்படுத்துவதற்கு தற்போது கிடைத்துள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை. இதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை கைப்பற்றுவதற்கும், கொழும்பு துறைமுகத்திற்கு சேதம் விளைவிக்கவும் யாரோ தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் பரவும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

எதிர்காலத்தில் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் படி அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்தலாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: