காதலர்களால் யாழ்ப்பாணத்தில் களேபரம் – இரண்டு பட்டது கிராமம் – ஒற்றுமைப்படுத்தி வைத்தனர் பொலிசார்!
Thursday, September 9th, 2021
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு சமூகங்களிற்கிடையில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது.
உடுப்பிட்டியில் நேற்று இரவு இந்த பதற்றம் ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த காதல் ஜோடியொன்று அண்மையில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததை தொடர்ந்து, சமூகங்களிற்கிடையில் மோதல் போக்கு ஏற்பட்டது.
நேற்று இரவு உச்சமடைந்து இரண்டு சமூகத்தினரும் முட்டி மோதிக்கொள்ளும் நிலைமையேற்பட்ட போது, வல்வெட்டித்துறை பொலிசார் நிலைமையை சுமுகமாக்க முயன்றனர்.
எனினும்,நிலைமையை கட்டுக்கடங்காமல் போகவே இராணுவத்தினர் அழைக்கப்பட்டு, நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. இன்று காலையில் இரண்டு சமூக பிரமுகர்களையும் பொலிசார் அழைத்து பேசி, நிலைமையை சுமுகமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வலி. கிழக்குப் பிரதேசத்தின் சில பிரதேசங்களில் வாழைக்குலைகள் திருட்டு!
பிரயோக விஞ்ஞான பீட விரிவுரைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
மதத்துக்காக மனித உயிரைக் கொலை செய்ய முடியாது - கா்தினால் மெல்கம் ரஞ்ஜித்!
|
|
|


