கருவிழியை அடையாளம் காண்பதற்கு புதிய நடைமுறை!
Thursday, September 12th, 2019
இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழி ஸ்கான் (Iris recognition) அடையாளம் காண்பதற்கான முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உயிரியல் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான கருவிகள் இறக்குமதி செய்யப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
போலியான தகவல்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டை கொண்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசித்தல் மற்றும் நாட்டில் இருந்து வெளியேறுவதை அடையாளம் காண்பதற்கு புதிய நடைமுறை உதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
நூறடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி - பலர் பரிதாப நிலையில்!
தடுப்பூசி வழங்கலை சட்டமாக்கும் பணிகளை துரிதப்படுத்துங்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுற...
விரைவில் கல்வி முறைமையில் மாற்றம் – பல மாவட்டங்களில் ஆசிரிய வெற்றிடங்கள் அதிகமுள்ளதாகவும் கல்வி அமை...
|
|
|


