யாழ்.மாநகர சபைக்குரிய கட்டடத் தொகுதிகள் அமைப்பது தொடர்பிலான உயர்மட்டக்  கலந்துரையாடல்!

Tuesday, May 24th, 2016

நகர அபிவிருத்தித்  திட்டமிடல் அமைச்சின் எற்பாட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள  யாழ்.மாநகர சபைக்குரிய கட்டடத் தொகுதிகள் அமைப்பது தொடர்பிலான உயர்மட்டக்  கலந்துரையாடல்  நேற்றுத் திங்கட்கிழமை(23-)  யாழ் பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் மா.வாகீசன் தலைமையில் நடை பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நகர அபிவிருத்தித்  திட்டமிடல் கட்டடக் கலைஞர்களின் வடிவமைப்புகள் மற்றும் பௌதீக ரீதியாக மாற்றங்களுக்கான புதிய கட்டிடங்களுக்கான அமைவிடங்கள் மற்றும் நகர அபிவிருத்தியூடாக யாழ்.மாவட்டத்தின் கலைப்படைப்புக்களை உள்ளடக்கியவாறான கட்டட நிர்மாணங்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பிலும் இதன் போது  துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.

முதற்கட்டமாக நூறு  மில்லியன் ரூபா செலவில் கட்டட நிர்மானப்பணிகள் ஆரம்பமாகவுள்ளன. இதன் ஆரம்பக் கட்டப்  பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் மா.வாகீசன் தெரிவித்தார்.

Related posts: