தரச்சான்றிதழ்  அற்ற  தலைக்கவசங்களுக்கு ஜனவரி 1  முதல்  தடை!

Friday, December 23rd, 2016

ஜனவரி முதலாம் திகதி முதல் தரச் சான்றிதழ்  இல்லாத தலைக்கவசங்களை சந்தைக்கு விநியோகிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டிருப்பதாக வீதி பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

தரச் சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்கள் தயாரிப்பதை பதிவு செய்வதற்காக டிசம்பர் 31ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக  நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்..  அதன்படி ஜனவரி 01ம் திகதி முதல் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் தரச்சான்றிதழ் அற்ற தலைக்கவசங்களை சந்தைக்கு விநியோகிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையில் தலைக்கவசங்களை தயாரிக்கும் 06 நிறுவனங்களில் 02 நிறுவனங்கள் தரச்சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளது.  இந்த மாதம் இறுதியாகும் போது ஏனைய நிறுவனங்களுக்கும் தரச்சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை நிறைவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் உயிரிழக்கும் மற்றும் காயமடையும் வீதம் அதிகரிப்பதால் அதனை தடுக்கும் விதமாக புதிய தரமுறை ஒன்றை அறிமுகம் செய்யும் தேவை ஏற்பட்டிருப்பதாக வீதி பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட மேலும் தெரிவித்துள்ளார்.

sls

Related posts: